சேது கமிட்டியை கலைக்க கோரிய சுவாமி மனு தள்ளுபடி
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 10 உறுப்பினர் கமிட்டியை கலைக்கக் கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டது.
ராமர் பாலத்தை பாழ்படுத்தாமல், சேது சமுத்திரத் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராய 10 உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது.
ஆனால் இந்தக் கமிட்டியின் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் மேலும் இரு உறுப்பினர்கள், ராமருக்கும், ராமர் பாலத்திற்கும் எதிரான கருத்தைக் கொண்டவர்கள். எனவே இப்படிப்பட்டவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரை நியாயமானதாக இருக்காது. எனவே இதை கலைக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த பின்னர் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், இது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி அல்ல. அரசின் நடவடிக்கையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி சுவாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications