நீதிமன்றத்தில் ஆஜரான 'சந்திரமுகி' ஆடு!!
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் 'சந்திரமுகி' என்ற பெயர் கொண்ட வெள்ளாடு ஆஜர் செய்யப்பட்டதால் கோர்ட்டில் சலசலப்பு ஏற்பட்டது.
நாசரேத் அருகேயுள்ள வகுத்தான் குப்பத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் விஜயகான்டீபன். இவர் சந்திரமுகி என்ற பெயரில் வெள்ளாடு ஒன்றை வளர்த்து வந்தார்.
கடந்த வாரம் இந்த ஆட்டை மங்களகுறிச்சியைச் சேர்ந்த பால் பாண்டி மகன் மணி என்பவர் திருடி சென்று விட்டார்.
இது குறித்து நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் முப்புடாதி வழக்கு பதிவு செய்து மணியைக் கைது செய்து சத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். ஆனால் 'சந்திரமுகி'யைக் காணவில்லை.
அதை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது ஒரு காட்டுப் பகுதியில் சந்திரமுகி ஜாலியாக மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதைப் பிடித்து கோர்ட்டுக்குக் கூட்டி வந்து ஆஜர்படுத்தினர்.
நீதிபதி ஜாய்ஜோசப் இந்த வழக்கை விசாரணை செய்து, மாதந்தோறும் ஆட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் எனக் கூறி விஜய காண்டீபனிடம் சந்திரமுகியை ஒப்படைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆடு ஆஜர்படுத்தப்பட்டதாலும், சந்திரமுகி என்ற பெயர் கொண்டிருந்ததாலும் கோர்ட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications