பள்ளிகள் அருகே இருந்த 132 டாஸ்மாக் கடைகள் மூடல்
சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள 132 டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மண்டலத்தில் 22 கடைகளும், மதுரை மண்டலத்தில் 32 கடைகளும், கோவை மண்டலத்தில் 13 கடைகளும், சேலம் மண்டலத்தில் 33 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 32 கடைகளும் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடந்த 6 மாதங்களில் மொத்தம் 82 கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து வந்த அதிருப்தியை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர போலி மதுவை விற்பனை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆங்காங்கு சில மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 6700 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications