ஜாதிக் கலவரத்தை தூண்ட சதி-திருமாவளவன்
சென்னை: தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டிவிட சதி நடப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் அம்பேத்கார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரியார் சிலை முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
அப்போது நிருபர்களிடம் திருமா கூறியதாவது:
மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியில் உள்ள அம்பேத்கார் சிலையின் கை பகுதியை உடைத்து சேதப்படுத்தி செருப்பு மாலை அணிவித்து அவமதித்திருக்கிறார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது.
இதன் மூலம் தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தை தூண்டிவிட வன்முறை கும்பல் சதித்திட்டம் தீட்டுது தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த அவமதிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் உள்ள அம்பேத்கார் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
இத்தகைய செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தலித் சமூகத்தினர் கலந்து கொண்டனர். அம்பேத்கார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications