டெல்லி விமானத்தில் பலியான சென்னை பயணி
சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பயணி மரணமடைந்தார்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த நரசிம்மன் (52) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மகள் மைதிலி துபாய்க்கு வேலைக்கு செல்ல இருக்கிறார்.
மைதிலிக்கு குடியுரிமை சான்று பெற நரசிம்மனும் மைதியிலும் டெல்லி சென்றனர். அங்கு நரசிம்மனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அவசரமாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை புறப்பட்டனர்.
நடுவானில் நரசிம்மன் உறங்கிவிட்டார். சென்னையில் விமானம் தரையிங்கியபின் தந்தையை மைதிலி எழுப்பினார். ஆனால், அவர் எழவில்லை. இதையடுத்து விமான நிறுவன ஊழியர்களும், விமான நிலைய டாக்டர்களும் விரைந்து வந்து அவரை சோதனையிட்டனர்.
அப்போது நரசிம்மன் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப விமான நிலைய போலீசார் முயன்றனர். ஆனால், அதற்கு மைதிலி எதிர்ப்பு தெரிவித்து கதறியழுதார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்து நரசிம்மன் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications