குடிபோதையில் பெண் எஸ்ஐயிடம் ரகளை-அதிமுகவினர், கரூர் எம்எல்ஏ கைது!
கரூர்: கரூரில் குடிபோதையில் பெண் போலீசாரிடம் பிரச்சனை செய்த அதிமுகவினரும் எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் கைது செய்யப்பட்டனர்.
கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி அக் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தோகமலைக்கு ஒரு விழாவிற்கு சென்று விட்டு கரூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
செந்தில் பாலாஜி ஒரு காரிலும் அவரைத் தொடர்ந்து இன்னொரு காரில் அவரது ஆதரவாளர்கள் சிலரும் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மது அருந்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது புலியூர் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிந்தனர். எம்எல்ஏவின் காரை விட்டுவிட்ட போலீசார் அதிமுகவினரின் காரை சோதனையிட்டனர்.
அப்போது குடிபோதையில் கார் ஓட்டிய அதிமுகவினர் மீது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. வழக்கு பதிவு செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சுமதியை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் அதிமுவினர்க்கும், சுமதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து எம்எல்ஏவுக்கு செல்போன் மூலம் அதிமுகவினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து திரும்பி வந்த எம்எல்ஏ செந்தில் பாலாஜி அவர்களை விடுவிக்குமாறு சுமதியிடம் கூறினார். ஆனால் இதை ஏற்க சுமதி மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் அவரது ஆதரவாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் எஸ்பி சண்முகவேல் சம்பவ இடத்திறகு வந்தார். எம்எல்ஏ செந்தில் பாலாஜியுடன் பேச்சு நடத்திய அவர் அதிமுகவினரை கலைந்து போகுமாறு கூறினார்.
அதை எம்எல்ஏவும் அதிமுகவினரும் ஏற்க மறுக்கவே அவர்களை கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி உள்ளிட்ட அதிமுவை சேர்ந்த சுமார் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை ஆயுதப்படை வளாகத்தில் இரவு 10 மணி வரை அடைத்து வைத்திருந்தனர் போலீசார். இத் தகவல் பரவவே சுமார் 300கும் மேற்பட்ட அதிமுவினர் ஆயுதப்படை வளாகத்தின் முன் குவிந்தனர். அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரவு 10 மணிக்கு மேல் எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் அவரது ஆதரவாளர்களையும் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜெயந்தி முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார்.
ஆனால் எஸ்.ஐ. சுமதி வழக்கு பதிவு செய்யாமல் இருக்க பணம் கேட்தாகவும், தர மறுத்தால் தங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார் என்றும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மதுரையில் அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் கத்தியுடன் ஒரு நபர் நுழைந்தார். அதனால் தான் இன்று கரூர் வரும் ஸ்டாலினின் வருகைக்காக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாக கூறப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications