போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த கொழும்பு தமிழர் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகே உள்ள வெள்ளவத்தை என்ற இடத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (37). இவர் நேற்று காலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம், சென்னையிலிருந்து லண்டன் செல்ல வந்திருந்தார்.
அங்கு குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிட்டபோது, தேவேந்திரன் வைத்திருந்த பாஸ்போர்ட் போலியானது என்பது தெரிய வந்தது.
இன்னொருவரின் பாஸ்போர்ட்டில், தனது புகைப்படத்தை ஒட்டி அதன் மூலம் லண்டன் செல்ல முயன்றுள்ளார் தேவேந்திரன். இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் தேவேந்திரன் ஒப்படைக்கப்பட்டார். அவரைக் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தேவேந்திரன் அக்டோபர் 4ம் தேதி லங்கன் ஏர்வேஸ் விமானம் மூலம் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்தார். அப்போதும் அவர் போலி பாஸ்போர்ட்டைத்தான் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதிகாரிகளின் கண்ணிலிருந்து தப்பி விட்டார்.
போலி பாஸ்போர்ட்டுகளைக் கண்டுபிடிக்கும் அதி நவீன வசதிகள் இருந்தும் எப்படி தேவேந்திரன் தப்பினார் என்பது குறித்து குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்ததும், திருப்பதி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு தேவேந்திரன் சென்றுள்ளார். அவருக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்குமா என்ற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கியூ பிரிவு அதிகாரிகளும் தற்போது இணைந்துள்ளனர். தேவேந்திரன் எங்கெங்கு சென்றார், அங்கு யாரையெல்லாம் பார்த்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications