பேருந்தில் ரூ.3 லட்சம் மதிப்பு நகைகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் பேருந்தில் சென்றவரிடம் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ராஜபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் கோவையில் உள்ள ஒரு பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பஸ்சில் மதுரை வந்த நந்தகுமார் அங்குள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து டவுன் பஸ்சில் சென்றார்.
அங்கு சென்றபின் தனது சூட்கேசை திறந்து பார்த்தபோது அதிலிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 42 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து நந்தகுமார் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கோவையிலிருந்து வந்தபோதோ அல்லது மதுரை டவுன் பஸ்சிலோ இந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications