Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

99 நாகை மீனவர்களும் விடுதலை - நாகை திரும்புகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்: முதல்வர் கருணாநிதியின் முயற்சியாலும், மத்திய அரசின் நடவடிக்கையாலும், இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 99 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். அனைவரும் நாகை திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 17 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் சனிக்கிழமை காலையே கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி வரவில்லை.

இதனால் அக்கரைப்பேட்டையில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தென்காசி ஜவஹருக்குத் தகவல் போனது. மாவட்ட ஆட்சித் தலைவர் அக்கரைப்பேட்டை மீனவர்கள் திரும்பி வராதது குறித்து முதல்வருக்குத் தெரிவித்தார்.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய முதல்வர் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம் காணாமல் போன மீனவர்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, காணாமல் போனதாக கூறப்பட்ட 99 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் இருப்பதும், காங்கேசன்துறை பகுதியில் அவர்கள் வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் மல்லகம் நீதிமன்ற நீதிபதி சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் அவரது இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தமிழக மீனவர்களை வருகிற 12ம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க போதிய இடம் இல்லை என்று யாழ்ப்பாணம் சிறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதால், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறையில் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்துத் தெரியவில்லை.

அகமதுவுக்கு கோரிக்கை:

இதையடுத்து வெளியுறவு இணை அமைச்சர் இ. அகமதுவை முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அனைத்து மீனவர்களும், அவர்களின் படகுகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று முதல்வரிடம் அகமது உறுதியளித்தார்.

இதனையடுத்து மத்திய அரசு இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு மீனவர்களை விடுவிப்பது குறித்து பேச்சு நடத்தியது. இதன் விளைவாக 99 மீனவர்களையும் விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து பறித்த மீன்பிடி வலைகள், படகுகள் மற்றும் அவர்களது உடைமைகள் அனைத்து திருப்பிக் கொடுக்கப்பட்டன.

இதையடுத்து நாகை மீனவர்கள் தங்களது படகுகளில் திரும்பிக் ஊர் திரும்பிக் கொண்டுள்ளனர்.

மீனவர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் ஹம்சா கூறுகையில், எல்லை தாண்டி மீன் பிடித்தது தொடர்பாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசும், பல்வேறு மீனவர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. மேலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நல்லுறவின் அடிப்படையிலும், மீனவர்களை விடுதலை செய்ய அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று கூறினார்.

முதல்வர் கருணாநிதியின் அதிரடி நடவடிக்கையால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டதற்கு அந்த மீனவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+