அரசு ஊழியர்களின் 'தீபாவளி வசூல்': வர்த்தகர்கள் அலறல்
தென்காசி: தீபாவளி பண்டிகையையொட்டி அரசு துறை ஊழியர்களின் வசூல் வேட்டையால் வர்த்தகர்கள் நொந்து போயுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் தென்காசி பஜாரில் கடைகளின் வாடகை அதிமாக உள்ளது. 500 சதுர அடி உள்ள இடத்திற்கு சர்வ சதாரணமாக ரூ.10,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
உயர்ந்துவிட்ட மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், ஊழியர்களின் சம்பளம், தொழில்வரி, நன்கொடைகள் ஆகியவற்றால் வர்த்தகர்கள் திண்டாடிவரும் நிலையில் தற்போது தீபாவளி வசூல் பெயரில் அரசு துறையினரின் நடவடிக்கைகளால் பஜார் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வணிக வரித்துறையினர், தீயணைப்பு துறையினர், வருமான வரித்துறையினர், வனத்துறையினர் ஆகியோரின் வரிசையாக வசூல் வேட்டை நடத்துவதால் தென்காசி பஜாரில் உள்ள வியாபாரிகள் கடையை பூட்டிவிட்டு சென்றுவிடலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
தீபாவளி பண்டிகையை காரணமாக வைத்து பதிவுத்துறை, செக்போஸ்ட்கள் போன்றவற்றில் கெடுபிடி வசூல் செய்யபடுவதாக புகார் எழுந்துள்ளது. பதிவுத்துறையிலும் இது போன்ற பண்டிகை காலங்களில் லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க லஞ்ச ஓழிப்பு துறை தனிப்படையினர் கடந்த ஆண்டுகளில் பலமுறை அதிரடி ரெய்டு நடத்திய நிலையிலும் இதனை கட்டுபடுத்த முடியவில்லை.
கடந்த ஆண்டு பத்திரப் பதிவு அலுவலகத்தில் இதே போன்று தீபாவளியை ஒட்டி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசு துறையினரின் வசூல் வேட்டையால் பஜார் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை தென்காசி மட்டுமல்ல. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு ஊழியர்களின் வசூல் வேட்டையால் வர்த்தகர்கள் நொந்து போயுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications