துணி வாங்க சென்ற மணமகன் மாயம்-திருமணம் நின்றது!
திருச்சி: திருச்சி அருகே திருமணத்திற்குத் தேவையான துணிகளை வாங்கச் சென்ற மாப்பிள்ளை திரும்பி வராததால் கல்யாணம் நின்று போனது.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கே.பேட்டையைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் ஜீவன் சகாயராஜ். அதே பகுதியில் டிவி மெக்கானிக்காக உள்ளார்.
இவருக்கும், மணச்சநல்லூரை அடுத்த நரிமேடு கிராமத்தை சேர்ந்த பிலவேந்திரன் என்பவரது மகள் மரியசெல்விக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி திருமண அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு கொடுத்தனர். திருமண மண்டபத்திற்கும் அட்வான்ஸ் கொடுத்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன.
இந்நிலையில் சகாயராஜ் திருமணத்திற்கான துணிகள் வாங்க திருச்சிக்கு கடந்த 2 ம் தேதி சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள், உறவினர்கள் சகாயராஜை தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து சாகாயராஜ் பெற்றோர்கள் லால்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் எஸ். ஐ. சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாப்பிள்ளை மாயமாகி விட்டதால் கல்யாணம் நின்று ேபாய் விட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications