கடையநல்லூர்-உதவித் தொகை வழங்காத அரசு பள்ளி முற்றுகை
கடையநல்லூர்: கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக பீடி தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படாததை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,300 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும், பீடித் தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என்று புகார் இருந்து வந்தது.
அத்துடன் ஆங்கிலம் வழி கல்வி பயிலும் மாணவிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், பள்ளியில் நோட்புக், ஒர்க் புக் உட்பட புத்தகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
மாணவிகளிடம் வசூல் செய்யப்படும் பணத்திற்கு முறையான ரசீது வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் நேற்று காலை மேலக்கடையநல்லூர், கிருஷ்ணபுரம் பகுதிகளில் இருந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் சுமார் 30 பேர் பள்ளியை முற்றுகையிட்டு கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டுமென கோஷம் எழுப்பினர்.
அப்போது தலைமை ஆசிரியை பிரேமாவதி பள்ளியில் இல்லை. அரசு ஒதுக்கிய கல்வி உதவி நிதியை மாணவிகளுக்கு வினியோகம் செய்வதில் முறைகேடு நடப்பதாக பெற்றோர்களிடையே புகார் எழுந்துள்ள நிலையில் இது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர்களின் இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications