பொடா நீதிமன்றத்தில் வைகோ-பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றார்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோ, கணேசமூர்த்தி, புலவர். செவந்தியப்பன், பூமிநாதன், வீரஇளவரசன், அழகுசுந்தரம், நாகராஜன், கணேசன், மணியம் ஆகிய 9 பேர் 2002ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2004ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி வைகோ ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபத்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இதற்கிடையே பொடா மறு ஆய்வுக் குழு வைகோ மீது வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என்றும், வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு 2004ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி உத்தரவிட்டது.
முதலில் இந்த உத்தரவை மதிக்க மறுத்தது ஜெயலலிதா அரசு. பின்னர் ஒரு வழியாக வைகோ மீதான வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை வாபஸ் பெற அனுமதி மறுத்தார்.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 9 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொடா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இந் நிலையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. வந்தவுடன் பொடா சட்டத்தையே ரத்து செய்தது. ஆனாலும் இச் சட்டதின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 18ம் தேதி பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நவம்பர் 7ம் தேதிக்குள் வைகோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.
இதை த்தொடர்ந்து வைகோ இன்று காலை பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆவடி தியாகராஜன்மூர்த்தி முன் ஆஜராகி பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டார்.
வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில், வெளிநாடு செல்ல இருப்பதால் பாஸ்போர்ட்டை பெற நீதிமன்றத்தில் ஆஜரானேன். வழக்கு நிலுவையில் தான் உள்ளது என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications