கனவில் வந்த காந்திஜி - தலாய் லாமா
டெல்லி: என்னுடைய வாழ்நாளில் நான் காந்தியை சந்தித்தது கிடையாது. ஆனால் அவரை நான் கனவில் சந்தித்தேன் என்று புத்தமதத் தலைவரான் தலாய் லாமா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சத்தியாகிரக நூற்றாண்டு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,
புத்தமதத்தில் நாமெல்லாம் மீண்டும் பிறப்போம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி என்னுடைய வாழ்நாளில் நான் பலமுறை காந்திஜியுடன் தொடர்பு கொண்டுள்ளேன்.
நான் காந்தியை நேரில் சந்தித்ததில்லை. ஆனால், திபேத்தில் ஒரு குளிர்கால இரவில் என் கனவில் காந்தியை சந்தித்தேன்.
அமெரிக்க நாட்டின் சட்ட உரிமை தலைவர் மார்டின் லூதர் கிங்கின் மனைவி சமீபத்தில் என்னிடம் கூறும்போது, என்னுடைய கணவர் காந்திஜியின் தத்துவங்களால் கவரப்பட்டவர். அதிலும் காந்திஜியைப் போல எளிய உடை அணிய விரும்பினார் என்றார்.
ஒரு அமெரிக்கர் அவ்வளவு எளிதாக இருக்க விரும்புவாரா என்று அப்போது என்னால் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியவில்லை.
எந்தவொரு ஆயுதமின்றி, வன்முறையை கையாளாமல் தன்னுடைய போராட்டத்தை கையாண்டவர் காந்திஜி.
இளம் இந்திய நண்பர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் அனைவரும் கண்டிப்பாக காந்தியின் கொள்கைகளை கடைபிடித்து, காப்பாற்ற வேண்டும் என்றார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 17 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications