வங்கிக் கடன்: புகார் தர மாணவர்களுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை
கோயம்புத்தூர்: கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் குறித்த விவரத்தை மாணவர்கள் தனக்கு விரிவான புகாராக அனுப்பினால், சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நேற்று கோவை வந்த ப.சிதம்பரத்திடம், கல்விக் கடன் வழங்க பல வங்கிகள் மறுப்பதாகவும், இதுதொடர்பாக நிதியமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், கல்விக் கடன் வழங்க மறுத்த, மறுக்கும் வங்கிகள் குறித்த அனைத்து விவரத்தையும் மாணவ, மாணவியர் எனக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பப்படும் புகார்கள் குறித்து விசாரித்து, தவறு செய்த வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நான் உறுதி அளிக்கிறேன்.
இதுதொடர்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் எனக்கு தனித் தனியாகவே புகார்களை அனுப்பலாம். இதன் மூலம் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும் என்றார் அவர்.
இந்த சமயத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவ, மாணவியர் சிலருடன் அமைச்சரை அணுகினார். அவரிடம், இந்த மாணவ, மாணவியருக்கு வங்கிகள் படிப்புக் கடன் வழங்க மறுத்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவ, மாணவியரிடம் இதுதொடர்பாக தனக்கு விரிவான தகவல்களைத் தருமாறு ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications