பிரிட்டனை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
லண்டன்: தனது நாட்டில் குடியேற வரும் வெளிநாட்டினருக்கு இங்கிலாந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இங்கிலாந்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறும் அந் நாட்டு மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது.
சராசரியாக ஒரு நாளைக்கு 600 பேர் இங்கிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வருவதாக பிரிட்டனின் புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளனது.
கடந்த ஆண்டில் மட்டும் 2,07,000 பேர் பிரிட்டனை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக விளங்குவது வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக ஊதியமும், நல்ல வேலையும், பிரிட்டனை விட தரமான வாழ்க்கையும் கிடைப்பதே என புள்ளிவிவரத்துறை சுட்டிக் காட்டியுள்ளது.
பிரிட்டனில் இருந்து வெளியேறுவோரில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவில் தான் குடியேறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
