நந்திகிராம் பிரச்சினை: நாடாளுமன்றத்தில் பாஜக,இடதுசாரிகள் மோதல்- அவைகள் ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் 3 நாள் இடைவெளிக்குப் பின் இன்று தொடங்கியது.
மக்களவை தொடங்கியதும் பாஜக எம்பிக்கள் எழுந்து மேற்கு வங்கத்தின் நந்திகிராம் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர். இதற்கு கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட விவகாரம், இதனால் அதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டியதில்லை என்றனர்.
ஆனால் முன்பு குஜராத்தில் நடந்த மதக் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் பிரச்சனை எழுப்பியதை சுட்டிக் காட்டிய பாஜக எம்பிக்கள் நந்திகிராம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர்.
அப்போது பேசிய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, முதலில் கேள்வி நேரம் முடியட்டும். பிறகு அது குறித்து பரிசிலிக்கலாம் என்றார்.
ஆனால், அதை பாஜக எம்.பிக்கள் ஏற்கவில்லை. இப்போதே விவாதிக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.
பதிலுக்கு இடதுசாரிகளும் குரல் தரவே அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. பல முறை கேட்டுக் கொண்டு அமளி அடங்காததால் அவையை சபாநாயகர் பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.
அதே போல மாநிலங்களவையிலும் நந்திகிராம் பிரச்சினை தொடர்பாக பாஜக- இடதுசாரிகள் இடையே மோதல் மூண்டது. அங்கு பேசிய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, மேற்கு வங்காளத்தில் இடதுசாரி அரசை காங்கிரஸ் கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையும் பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பிற்பகலில் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள் மீண்டும் கூடியபோதும் இதே பிரச்சனை வெடித்தது. இதையடுத்து இரு அவைகளும் இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications