என் மீது ஜாதி முத்திரை குத்தாதீர்கள்-சரத்குமார்
மதுரை: என் மீது ஜாதி முத்திரை குத்தாதீர்கள் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அகில இந்திய லயன்ஸ் சங்க மண்டல மாநாட்டில் அவர் பேசுகையில்,
எதிர்காலம் எப்படி இருக்கும், என்ன நடக்கும் என தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டால்தான் எதையும் சாதிக்க முடியும். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்.
இந்த நிலை நீடிக்கக்கூடாது. கிராமப் பகுதி மக்கள் நகரங்களை நோக்கி வந்து கொண்டேயிருக்கின்றனர். விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் வேலை தேடிக் கொள்ளலாம் என்பது மாயத் தோற்றம்.
எனவே, கிராமப் பகுதி முன்னேற்றத்துக்கு கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். நகரங்களை போன்று கிராமங்களிலும் தரமான கல்வி அளித்து, வேளாண்மையில் புரட்சி ஏற்படுத்த வேண்டும்.
ஆங்காங்கே தினமும் கொலை, கொள்ளை, வன்முறை நடக்கிறது. இதனை தடுக்க காவல்துறையில் அரசியல் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது.
நான் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கருத்துகளை கேட்டு, அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்துதான் புதிய கட்சி துவக்கியுள்ளேன். அரசியலில் மட்டுமே என்ன ஜாதி என்று பார்க்கின்றனர்.
காமராஜர் தேசிய தலைவர். அவர் மீது ஜாதி முத்திரை குத்த முடியாது. என்னை பொறுத்தவரை மக்கள் கருத்தை அறிந்து கட்சி துவங்கியுள்ளேன்.
என் மீது ஜாதி முத்திரை குத்தாதீர்கள். நான் திட்டமிட்டு கட்சி கொள்கை திட்டங்களை வகுத்துள்ளேன் என்றார் சரத்குமார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications