தலை தீபாவளிக்கு வந்த புதுப் பெண் காதலனுடன் ஓட்டம்!
திருவள்ளூர்: தலை தீபாவளிக்கு தாய் வீட்டிற்கு வந்த புதுப் பெண், அங்கு தனது கணவருக்கு டேக்கா கொடுத்து விட்டு காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். ஆனால் போலீஸார் துரிதமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை மீட்டனர்.
திருவள்ளூர், மேல்விளாகமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சரளாவுக்கும், தாம்பரத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
தலை தீபாவளிக்காக தனது தாய் வீட்டிற்கு சரளா கணவருடன் வந்திருந்தார். மனைவியுடன் சேர்ந்து சந்தோஷமாக தலை தீபாவளியை கொண்டாடிய சங்கரிடம், சரளா தாய் வீட்டில் சில தினங்கள் இருந்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். அதனால் மனைவியை தாய் வீட்டில் விட்டு விட்டு சங்கர் தாம்பரத்திற்கு போய் விட்டார்.
இந்த நிலையில், கடந்த 15ம் தேதியன்று சரளா தனது தாயாருடன் தனது கணவர் வீட்டிற்கு செல்வதற்காக திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கு கழிவறைக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்ற சரளா வெகு நேரமாகியும் வரவில்லை.
இதனால் பயந்து போன சரளாவின் தாய் அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், மகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்தார். சங்கருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சரளா, சீனிவாசன் என்பவருடன் திருப்பூரில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சரளா திருமணத்திற்கு முன்னர் 3 வருடங்களாக சீனிவாசனைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு சரளாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும். அவசரம் அவசரமாக சரளாவை சங்கருக்குக் கட்டி வைத்து விட்டனர்.
கல்யாணம் ஆன பிறகும் கூட காதலனை மறக்க முடியாமல் இருந்த சரளா, தலை தீபாவளிக்கு வந்தபோது அதை பயன்படுத்தி காதலருடன் தப்பி விட்டார்.
போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications