பாபர் மசூதி நினைவு தினம் - அயோத்தியில் தடை
அயோத்தி (உ.பி.): பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்கி வருவதால் அயோத்தியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயோத்தி பாபர் மசூதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 15வது ஆண்டு தினம் டிசம்பர் 6ம் தேதி வருகிறது. இதையொட்டி உத்தரப் பிரதேச மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே எடுக்க ஆரம்பித்துள்ளது.
அதன்படி அயோத்தியில் தடை உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் டிசம்பர் 6ம் தேதியை தீரர்கள் தினமாக அனுசரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு துயர தினமாக டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாக இப்போதிருந்தே அயோத்தியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு அமலில் உள்ள காலகட்டத்தில் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications