அப்ரூவர் ரவி சுப்ரமணியத்தை விடுவிக்கக் கோரி தம்பி வழக்கு
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்ரமணியத்தை விடுதலை செய்யக் கோரி அவரது சகோதரர் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார் ரவி சுப்ரமணியம். அதன் பின்னர் அவர் அப்ரூவர் ஆனார். தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார் ரவி சுப்ரமணியம்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர். இந்த நிலையில் ரவிசுப்ரமணியத்தின் சகோதரர் முரளி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், சங்கரராமன் கொலை வழக்கில் எனது சகோதரர் ரவி சுப்ரமணியம் அப்ரூவர் ஆகியுள்ளார். கிரிமினல் சட்டப்படி அப்ரூவரால் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வர முடியாது.
இந்த வழக்கில் கிட்டத்தட்ட அனைத்துக் குற்றவாளிகளுமே ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். முக்கியக் குற்றவாளிகளான ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். ஆனால் எனது சகோதரர் மட்டும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைபட்டுள்ளார்.
எனது சகோதரருக்கு கொலையில் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கொலைச் சதித் திட்டம் தொடர்பாக மட்டுமே அவருக்கு தெரியும்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். அப்படி விடுவிக்கப்பட்டால் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தை அவர் மாற்றிக் கூற மாட்டார் என உறுதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார் முரளி.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.டி. தினகரன், ரகுபதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications