கைதான தமிழர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு
கொழும்பு: கொழும்பில் திடீரென கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்யுமாறு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் சமீபத்தில், அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் பெண் விடுதலைப் புலி ஒருவர் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கொழும்பில் தற்கொலைப் படை மனித குண்டுகள் ஊடுறுவியிருக்கலாம் என்று பீதியடைந்த இலங்கை போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நடவடிக்கையின்போது கொழும்பில் வசித்து வரும் அப்பாவித் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கைது செய்யப்பட்டனர். வீடு வீடாக சென்று தமிழர்களை போலீஸார் கைது செய்தனர். 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
எந்தவித குற்றச் செயலிலும் தொடர்பில்லாத அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யுமாறு அதிபர் ராஜபக்சே காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கைதானவர்கள் தவிர ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வாடி வரும் தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications