கிருஷ்ணா நீரை தேக்க வட சென்னையில் 2 புதிய அணைகள்-துரைமுருகன்
சென்னை: ஆந்திராவில் இருந்து கிடைக்கும் கிருஷ்ணா நீரை தேக்கி வைப்பதற்காக வட சென்னையில் ராமஞ்சேரி, திருகடலம் ஆகிய பகுதிகளில் புதிதாக 2 அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
பொதுப்பணித்துறையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு அவர்களது பணியை துரிதப்படுத்த 12 ஜீப்புகள், 2 கார்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு எந்த வாகனமும் வழங்கப்படவில்லை.
11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறைக்கு ரூ.11,000 கோடி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது வழங்கப்படும் என்று நம்புகிறோம்.
பாலாறு அணை கட்டியே தீருவோம் என்று ஆந்திர அரசு கூறி வருகிறது. அதை சட்டப்படி எதிர்கொள்வோம். முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணையை கட்டுவோம் என்றும், இதுகுறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருக்கிறார்.
இனியும் இது போல லாவணி கச்சேரிகள் நடத்த நாங்கள் விரும்பவில்லை. அணை கட்ட முடியுமா? முடியாதா? என்பது பற்றி எனக்கு தெரியும். தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக கிருஷ்ணா நீர் கொண்டு வரப்பட்டது. தற்போது அதை தேக்கி வைக்க இடமில்லாததால் தண்ணீரை வாங்க முடியவில்லை.
எனவே கிருஷ்ணா நீரை தேக்கி வைப்பதற்காக வடசென்னையில் ராமஞ்சேரி, திருகடலம் ஆகிய பகுதிகளில் 2 அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு சில இடையூறுகள் உள்ளன. அவற்றை போக்கி அங்கு நிச்சயமாக அணை கட்டுவோம் என்றார் துரைமுருகன்.
-
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications