பள்ளி கம்ப்யூட்டர்களை திருடிய கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் கைது
போடி: வேலியே பயிரை மேய்ந்தது போல, போடிநாயக்கனூரைச் சேர்ந்த நகராட்சி பள்ளியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவரே பள்ளிக்கூட கம்ப்யூட்டர்களைத் திருடி கைதாகியுள்ளார்.
போடிநாயக்கனூர், சுப்புராஜ் நகரில் நகராட்சி ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக பணியாற்றுபவர் செந்தில்குமார்.
இவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த சிலர் அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் செந்தில்குமார்தான் திருடன் என்று தெரிய வந்து அதிர்ந்தனர்.
தனது நண்பர்களின் உதவியுடன் ஆசிரியர் செந்தில்குமார், தனது பள்ளிக்கூட கம்ப்யூட்டர்களைத் திருடியுள்ளார். இதையடுத்து கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்ளைப் பறிமுதல் செய்த போலீஸார் செந்தில்குமாரையும், அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.
வேலை பார்த்த பள்ளிக்கூடத்திலேயே கை வைத்த ஆசிரியரால் போடியில் பரபரப்பு நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications