திமுக மாநாடு-ராட்சத பலூன் வெடித்து இருவர் காயம்
நெல்லை: நெல்லையில் ராட்சத பலூன் வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டை ஒட்டி மாநகரம் முழூவதும் டிஜிட்டல் போர்டுகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் கொடிகள் என பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் உள்ள கட்டிடத்தின் மாடிகளில் முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர் ஸ்டாலினை வரவேற்று ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
வண்ணார்பேட்டை ஓட்டல் ராம் பிரசாத் மாடியில் ஸ்டாலினை வரவேற்று மாலைராஜா எம்.எல்.ஏ ராட்சத பலூன் பறக்க விட்டுள்ளார். இன்று காலை அந்த பலூனுக்கு சென்னை போரூரைச் சேர்ந்த கார்த்திக், பட்டாபிராமைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் காற்று நிரப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரவிதமாக பலூன் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications