சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி
Subscribe to Oneindia Tamil

சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் பத்து மணி வரை அடுத்தடுத்து 2 சூட்கேஸ்கள், ஒரு கைப்பை மற்றும் ஒரு அட்டைப் பெட்டி ஆகியவை கேட்பாரற்றுக் கிடந்தன.
இதனால் அவற்றில் வெடிகுண்டுகள் இருக்கலாமோ என்ற பீதி ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். அவற்றை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அங்கிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு சென்றனர்.
இவற்றில் என்ன உள்ளது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இவை தற்செயலாக விடப்பட்டனவா அல்லது வேண்டும் என்றே விடப்பட்டனவா என்று விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications