கருணாநிதி நாளை டெல்லி செல்கிறார்
சென்னை: முதல்வர் கருணாநிதி 4 நாள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார்.
டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சி கூட்டம் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை மதியம் 1.40 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் டெல்லி செல்கிறார் கருணாநிதி.
இந்த மாநாட்டில் நக்சல்கள் மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. இதில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாரா மிலிட்டரிப் படைகளின் தலைவர்கள், உளவுப் பிரிவுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
வரும் 20ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் அனைத்து மாநில முதல்வர்களையும் தனித்தனியே சந்தித்து பேசுகிறார். அப்போது பிரதமரையும் கருணாநிதி சந்திக்கிறார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கிறார்.
இந்தப் பயணத்தின் போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தனையும் கருணாநிதியையும் சந்திக்க வைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 21ம் தேதி கருணாநிதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications