'புலிகள்': போலி வழக்குகளை வாபஸ் பெற பழ.நெடுமாறன் கோரிக்கை
மதுரை: விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இல்லை என்று இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு செயலாளர் எம்.கே. நாராயணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதுவும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 12ம் தேதியன்று இந்திய ராணுவத்தின் தென் மண்டல தளபதி லெப். ஜெனரல் நோபுல் தம்புராசும் இதைத் தான் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பு குறித்து முக்கியப் பொறுப்பில் உள்ள 2 அதிகாரிகளே தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்றும், புலிகள் ஊடுருவல்கள் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் உள்ள கியூப் பிரிவு போலீசார் இங்குள்ள சிலரை விடுதலைப் புலிகள் என்று கூறி பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பில் உள்ள அதிகாரிகள் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்கிறார்கள்.
ஆனால் தமிழக போலீசார் விடுதலைப் புலிகள் என கூறி பொய் வழக்குகள் தொடுத்துள்ளனர். இதன் மூலம் அவ்வழக்குகள் போலியானவை என தெளிவாகின்றது.
எனவே மேற்கண்ட பொய் வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் பொய் வழக்கு தொடர்ந்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications