தமிழகம் வரும் 24,200 மெட்ரிக் டன் ஜோர்டான் உரம்
சென்னை: ஜோர்டான் நாட்டிலிருந்து 24 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் டிஏபி உரம் இன்று தமிழகத்திற்கு இறக்குமதியாகி வருகிறது.
தமிழகத்தில் பெரும் உரத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குறிப்பாக டிஐபி உரம் கிடைக்காத நிலை இருப்பதாகவும் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதை அரசு மறுத்திருந்தது.
இந்த நிலையில், ஜோர்டான் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு டிஏபி உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 24 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் உரம் ஜோர்டானிலிருந்து தமிழகத்திற்கு வருகிறது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த நவம்பர் 23ம் தேதி உரத் தேவை குறித்து முதல்வர் கருணாநிதி, மத்திய உரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து ஜோர்டானிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உரம் இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேருகிறது. உரம் வந்து சேர்ந்தவுடன் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தில் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான கால கட்டத்தில் 77 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் தேவைப்படும். ஜனவரி மாதத்தில் 33 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் உரம் தேவைப்படும். இதைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்திடமிருந்து 17 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் டிஏபி உரத்தை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 15 ஆயிரத்து 210 மெட்ரிக் டன் உரம், ஸ்பிக், மங்களூர் கெமிக்கல்ஸ் மற்றும் பெர்ட்டிலைசர்ஸ், இப்கோ ஆகிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும்.
இந்த ஏற்பாடுகள் மூலம் தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications