கருத்துக் கணிப்புகள் மீது நம்பிக்கையில்லை-விஜயகாந்த்

சென்னை: உச்சாணிக் கொம்புக்கு தூக்கிவிட்டு கீழே தள்ளிவிடுவது தான் கருத்துக் கணிப்புகள். அதனால் எனக்கு கருத்துக் கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் தேமுதிக சார்பில் 500 ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி (குர்பானி) வழங்கும் விழாவில் விஜயகாந்த் பேசியதாவது,
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். முஸ்லீம் மக்களுடன் நட்புறவாக இருக்க வேண்டும் என்பதற்காக தேமுதிக சார்பில் குர்பானி கொடுக்கிறோம். இதுவரை மற்ற எந்தவொருக் கட்சியும் இதுபோல செய்தது கிடையாது. மற்ற கட்சிகளுக்கு முன் உதாரணமாக தேமுதிக விளங்குகிறது.
கருத்துக் கணிப்பில் மக்களிடம் தேமுதிக 40 சதவீதம் செல்வாக்கு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம், உச்சாணி கொம்புக்கு தூக்கிவிட்டு கீழே தள்ளிவிடுவது தான் கருத்துக் கணிப்புகள்.
டெல்லிக்கு சென்ற முதல்வர் கருணாநிதி வேலையில்லாத் திண்டாட்டம், மலேசியத் தமிழர் பிரச்சனை பற்றி பேசாமல் மெளவுனமாக இருந்ததற்கான மர்மம் தெரியவில்லை. காங்கிரசுடன் நாங்கள் நட்புடன் இருப்பதைக் கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. எங்கே, நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோமோ என்ற பயத்தில் இருக்கின்றனர் என்றார் விஜயகாந்த்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications