தமிழக போலீஸின் மெத்தனம்: மகளிர் ஆணையம் கண்டனம்
மதுரை: பெண்களுக்கு எதிரான கொடுமை தொடர்பான புகார்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதில் தமிழக போலீஸார் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நிர்மலா வெங்கடேசன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கணவர் குடும்பத்தாரால் ஓடும் காரிலிருந்து கீழே தள்ளப்பட்டு படுகாயமடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெற்றோர் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் ஜெனிதாவை நேற்று நிர்மலா வெங்கடேசன் நேரில் சந்தித்து நடந்தது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து எங்களுக்கு வந்துள்ள பெரும்பாலான புகார்கள் காவல் துறையினர் மீது தான். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்து விசாரணை நடத்த அவர்கள் மெத்தனம் காட்டுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கு ஆலோசனை சொல்வதற்கு தனியாக மகளிர் பிரிவை அமைக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டும் கூட அதை தமிழக அரசு செய்யாமல் உள்ளது.
தமிழக அரசு ஏராளமான பெண் போலீசாரை நியமனம் செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது.
திருச்சி பெண் ஜெனிதா, அமெரிக்காவில் அவரின் கணவர் குடும்பத்தினரால் ஓடும் காரிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள அவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் முயற்சிகளை எடுக்கும் என்றார் நிர்மலா.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications