எம்.ஜி.ஆர். நினைவு நாள்-ஜெ. அஞ்சலி
சென்னை: மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் அனுசரிக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் 20 வருடங்கள் ஆகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜிஆர். பக்தர்கள், அதிமுகவினர் எம்.ஜி.ஆர். படங்களுக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தெரு முனைகள், முக்கிய சாலைகள், கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள எம்.ஜிஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அண்ணா சாலையிலிருந்து எம்.ஜி.ஆர். நினைவிடம் வரை அதிமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
இதேபோன்ற அமைதிப் பேரணிகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். சிலைகள் அலங்கரிக்கப்பட்டு அவற்றுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன.
அன்னதானம், மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், கோவில்களில் சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதிமுகவைத் தொடங்கிய பின்னர் 1977ம் ஆண்டு முதல்வர் பொறுப்புக்கு உயர்ந்த எம்.ஜி.ஆர். மரணமடையும் வரை தொடர்ந்து அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் அஞ்சலி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவகத்தில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட ஏராளமான தேமுதிக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications