திருப்பூர் நகராட்சியின் கடைசிக் கூட்டம் - நெகிழ்ச்சியில் கவுன்சிலர்கள்
திருப்பூர்: மாநகராட்சியாக புதுப் பொலிவு பெறவிருக்கும் திருப்பூர் நகராட்சியின் கடைசிக் கூட்டம் நேற்று நடந்தது. கவுன்சிலர்கள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஈரோடு மற்றும் திருப்பூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் திருப்பூர் மாநகராட்சி ஆகிறது.
இதையடுத்து புதிய மாநகராட்சி எல்லைக்கான வரைபடம் மற்றும் திறந்து வைக்கப்படவுள்ள நினைவுத் தூணுக்கு ஒப்புதல் தருவதற்காக நகராட்சிக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டிருந்தது.
மேலும் மாநகராட்சியாக நிலை உயர்த்தும் அரசு ஆணையும் உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
நகராட்சியாக இதுவே கடைசிக் கூட்டம் என்பதால் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் நெகிழ்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வழக்கம் போல பல்வேறு கட்சி கவுன்சிலர்களும், தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சினைகளை சபையில் எழுப்பினர்.
அத்தனை பிரச்சினைகளுக்கும் மாநகராட்சி ஆன பிறகாவது தீர்வு கிடைக்குமா என்று கவுன்சிலர்கள் ஆதங்கத்துடன் கேட்டனர். கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் என்று நகராட்சித் தலைவர் செல்வராஜ் நம்பிக்கை ெதரிவித்தார்.
இறுதியில், கடந்த 100 ஆண்டு கால நகராட்சி வாழ்க்கையை முடித்துக் கொண்டு நேற்றைய கடைசிக் கூட்டம் நிறைவு பெற்றது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications