நிலங்கள் சுருட்டும் அறக்கட்டளைகள்-அமைச்சர்
சென்னை: அறக்கட்டளை என்ற பெயரில் ஏராளமான நிலத்தை வாங்கி தனியாருக்கு விற்பதை தடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவர் பேசுகையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு நிரந்தர திட்டங்களை அமல்படுத்த உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உட்பட பல நிறுவனங்கள் ரூ.4,000 கோடி வழங்கின. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும், 13 மாவட்ட கலெக்டர்களை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தி இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 13,000 வீடுகள் வரை கட்டிக் கொடுத்தனர். எனினும் முழு அளவில் நிவாரணப் பணிகளை அவர்களால் செய்ய முடியவில்லை. இதையடுத்து, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்ளாட்சித் துறை மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 50,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முடியும் தருவாயில் உள்ளது.
சுனாமி பாதிப்பை தவிர்க்க கடற்கரையோரங்களில் மாங்குரோவ் காடுகள் வளர்க்கப்படுகின்றன.
தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் அதிகளவு நிலங்களை தனியார் வாங்க முடியாது. அதற்கான அனுமதியை அரசு தருவதில்லை. ஆனால் அறக்கட்டளை என்ற பெயரில் ஏராளமான நிலத்தை வாங்கி தனியாருக்கு விற்கின்றனர். (இது பாமக நிறுவனர் ராமதாசுக்கு தரப்பட்டுள்ள பதிலாகக் கருதப்படுகிறது)
இதை மத்திய அரசு தான் கட்டுப்படுத்த முடியும். நிலங்கள் வாங்கிக் குவிப்பதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அறக்கட்டளைகள் தொடர்பான சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார் பெரியசாமி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications