தென்காசி படுகொலை: 55 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
தென்காசி: தென்காசியில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 55 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2 தொழிலதிபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசியில் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி இந்து முண்ணனி தலைவர் குமார் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிபரவரி மாதம் தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் சேட் கான் தாக்கப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதில் ஹனீபா என்பர் உள்ளிட்டோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்தனர். அப்படி வரும்போது, இரண்டு தரப்பினருககும் இடையே கூலக்கடை பஜார் சந்திப்பில் மோதல் மூண்டது.
அதில், சுரேஷ், சேகர், செந்தில், அசன் கனி, பஷீர், நாகூர் மீரான் ஆகிய 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் குமார் பாண்டியனின் சகோதரர் சக்தி பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தொழிலதிபர் வி.டி.எஸ் ரகுமான் பாட்ஷா, கமால் முகைதீன் உள்பட 27 பேர் மற்றும் மோதலில் பலியான அசன் கனி, நாகூர் மீரான், பஷீர் ஆகியோரையும் சேர்த்து மொத்தம் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 7 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சம்சுதீன், செய்யது அலி, சிக்கந்தர், முகமது இஸ்மாயில், திவான் ஒலி என்ற கதிரவன், சேட் என்ற அயூப், மணி என்ற சாகுல், முருகேசன் என்ற அப்பதுல்லா, நவாஸ், மீரான் மைதீன், தொழிலதிபர்கள் விடிஎஸ் பாட்ஷா, கமால் முகைதீன் ஆகியோர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
இதே போன்று அலாவுதீன் கொடுத்த புகாரில் சக்தி பாண்டியன், சுரேந்தர் உள்பட 22 பேர் மற்றும் மோதலில் பலியான சேகர், சுரேஷ், செந்தில் ஆகியோருடன் மொத்தம் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 7 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கபிலன், சுப்பிரமணியன், தங்கமாடசாமி, சேகர் ஆகிய நான்கு பேரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சக்தி பாண்டியன் தரப்பில் 133 பேரும், அலாவுதீன் தரப்பில் 117 பேரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தவிர இரண்டு தரப்பிலும் சேர்ந்து 19 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்ட 55 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கும் போது அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும். இதனையடுத்து போலீசார் இரண்டு தொழிலதிபர்கள் உள்பட தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications