இலங்கை கடற்படைத் தாக்குதலுக்கு ஜெ. கண்டனம்
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறையின் முறையான அனுமதி பெற்ற பின்னரே கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லைப் பகுதியில், அவர்கள் மன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் சேகர் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது.
இத்தகைய திடீர் தாக்குதலில் ஈடுபட்டு மீனவர்களின் வாழ்வாதரத்தையே சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் செயலை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசும், திமுக அரசும் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications