பறவைக் காய்ச்சல் பீதி-நாமக்கல்லில் கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம்

இதனால் கோழிப் பண்ணையாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தின் தினஜ்பூர், வீர்பூமி ஆகிய இரு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி ஆயிரக்கணக்கான கோழிகள் செத்தன. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் உள்ள கோழிகளை அழிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இதனால் இந்தியா முழுவதும் பறவைக் காய்ச்சல் பீதி பரவியுள்ளது. இந்த பீதியால் இந்தியாவில் இருந்து வரும் முட்டைகளுக்கு மஸ்கட், தோஹா, பூடான், இலங்கை, துபாய் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.
வழக்கமாக நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு தினமும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும்.
ஆனால் வெளிநாடுகளின் தடையால் முட்டை ஏற்றுமதி வர்த்தகத்தை ஏற்றுமதியாளர்கள் நிறுத்திக் கொண்டதால் தற்போது கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
தற்போது தென் ஆப்பிக்காவுக்கு மட்டும் தினமும் 10 லட்சம் முட்டைகள் மட்டும் ஏற்றுமதியாகின்றது. இதனால் பண்ணை உரிமையாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு, தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டைகள் அனுப்பப்பட்டு வரும் வாகனங்களை கேரள அரசு அனுமதிக்க மறுத்து வருகிறது.
அரசு சான்றிதழை அவமதிக்கும் கேரளா:
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் இல்லை என சான்றிதழ் கொடுத்தால் தான் தமிழக முட்டை, கோழிகளை அனுமதிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இதனால் கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் கொடுத்தாலும் கேரள எல்லையில் முட்டைகள், கோழிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் காத்துக்கிடக்கும் நிலை தொடருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications