19 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த வாலிபர்
ஈரோடு: ஈரோடு மாவட்டம், கொடுமுடி சுல்தான் பேட்டையைச் சேர்ந்த சிக்கந்தர் என்ற வாலிபர் 19 ஆண்டு இடைவெளிக்கு பின்பு தனது குடும்பத்தோடு இணைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி சுல்தான் பேட்டையைச் சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் சிக்கந்தர் அலி ஒன்பது வயதில் படிப்பு ஏறவில்லை என்று கூறி மும்பைக்கு வேலைக்கு அவர்களது உறவினர் ஒருவருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிக்கந்தர் வேலை செய்த இடத்தில் அவரை அடித்து துன்புறுத்தியதால் அவர் அங்கிருந்து தப்பி ஒடி தனியாக வசித்தார். பசியால் வாடினார். அப்போது சிக்கந்தரின் பரிதாப நிலையைக் கண்டு முசாபீர் என்பவர் அவரை வளர்த்தார்.
மகன் பற்றிய தகவல் தெரியாமல் முகமது உசேன் இறந்து விட்டார். இதனால் அனைவரும் சிக்கந்தர் பற்றிய நினைப்பு இன்றி மறந்து போனார்கள்.
மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கந்தர் வேலை செய்யும் போது மதுரையைச் சேர்ந்த குருசாமி என்பவர் காய்கறி சப்பளை செய்து வந்துள்ளார். அவரிடம் தனது குடும்பம் பற்றி விசாரித்துக் கூறுமாறு சிக்கந்தர் கேட்டுக்கொண்டுள்ளார். குருசாமியும் அவரது குடும்பம் பற்றி விசாரித்துத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சந்தோஷமடைந்த சிக்கந்தர் கடந்த 13 ம் தேதி அன்று ரயில் மூலம் தனது குடும்பத்தினரை பார்க்க புறப்பட்டார்.
ஊருக்கு திரும்பி தனது குடும்பத்தினரை சந்தித்து சந்தோஷத்தில் மூழ்கினார். அவரைப் பார்த்த குடும்பத்தினர் அவரைக் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.












Click it and Unblock the Notifications