ஏற்காட்டில் பெண்கள் ரகசிய பூஜை - பரபரப்பு
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் உள்ள வெள்ளக்கடை கிராமத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு நடத்திய ரகசிய பூஜையால் பரபரப்பு நிலவியது.
வெள்ளக்கடை கிராமத்தில், பொங்கல் முடிந்த 5வது நாளில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தப் பூஜையில் பெண்கள் நிர்வாணமாக கலந்து கொள்வதாக சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து சில ஆண்டுகளாக தமிழக வருவாய்த்துறை பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களின் முன்னிலையில்தான் பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பூஜையின்போது வெள்ளக்கடை கிராமத்தில் ஆண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஊரின் எல்லைக்கு அப்பால் போய் விடுவது வழக்கம்.
இந்த ஆண்டு பூஜை நேற்று வெள்ளக்கடை கிராமத்தில் நடந்தது. இதையொட்டி ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். பின்னர் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூஜை நடத்தப்பட்டது. கேப்பை ரொட்டியை வைத்து பெண்கள் அம்மனை வழிபட்டனர்.
இந்த பூஜையின்போது மண்டல துணை தாசில்தார் தேவிகாராணி, பெண் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜை முழுவதும் வீடியோவில் எடுக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications