200 பவுன் நகை கொள்ளை - சென்னையில் கொள்ளையர்கள் துணிகரம்
சென்னை: சென்னையில் மார்வாடி ஒருவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 200 பவுன் நகைகளைத் திருடிச் சென்று விட்டனர்.
சென்னை யானை கவுனி பி.கே.ஜி. தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவரது மனைவி சர்மிளா (வயது 30). இவர்களது வீடு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் அமைந்துள்ளது. அடகுத் தொழில் செய்து வருகிறார் மகேந்திர குமார்.
நேற்று மகேந்திரகுமார் தொழில் விஷயமாக ஐதராபாத் சென்றுவிட்டார். வீட்டில் சர்மிளா மட்டும் இருந்தார். மாலையில் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இரவு 10 மணி அளவில் திரும்பி வந்த அவர் வீட்டில் இருந்த பீரோ கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த நகைகள் திருடு போயிருந்தன. மர்ம நபர்கள் உள்ளே புகுந்து நகைகளை திருடிக் கொண்டு போனது தெரிய வந்தது. கொள்ளை போன நகைககள் மதிப்பு 200 பவுன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொட்டை மாடி வழியாக மர்ம ஆசாமி வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் பீரோவில் இருந்த கைரேகைகளை சோதித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் பிடிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு உதவி போலீஸ் கமிஷனர் பாலசந்திரன் விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டார்.
இதேபோல நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications