காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது

Subscribe to Oneindia Tamil


மேட்டுப்பாளையம்: காதலியிடம் உல்லாசமாக இருந்து விட்டு, அவரை தனது நண்பர்களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்த கொடூர காதலனை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூடுதுறை மலைப்பகுதியை சேர்ந்த ஜக்கரியா மகள் ஆஜிரா (22). இவருக்கும் இப்பகுதியைச் சேர்ந்த டிரைவர் வேலை பார்க்கும் குண்டு கார்த்திக் (24) என்பவரும் காதலித்து வந்தனர்.

கடந்த 15ம் தேதி முதல் ஆஜிராவை காணவில்லை. இதுகுறித்து அவரது சகோதரி பானு கடந்த 22ம் தேதி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஜிராவை தேடி வந்தனர்.

இதற்கிடையே திடீரென்று ஆஜிரா தனது வீட்டுக்கு அலங்கோலமான நிலையில் வந்துள்ளார். அவரது கோலத்தைப் பார்த்த வீட்டினர் பதறிப் போய் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், காதலன் குண்டு கார்த்திக்கும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஹோட்டல் அறையில் வைத்து கற்பழித்துவிட்டதாக தெரிவித்துள்ளார் ஆஜிரா.

அதிர்ச்சியுற்ற ஆஜிராவின் பெற்றோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்று புகார் அளித்தனர்.

ஆஜிரா போலீஸில் கொடுத்த புகாரில், நானும், குண்டு கார்த்திக்கும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று என்னிடம் வந்த குண்டு கார்த்திக் உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன் வா என்று கூப்பிட்டார். நானும் அவருடன் சென்றேன்.

முதலில் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் குண்டு கார்த்திக் என்னைப் பார்த்து, நான் உன்னை திருமணம் செய்து கொள்ள அழைத்து வரவில்லை. உல்லாசமாக இருக்கவே அழைத்து வந்தேன் என்று கூறி அறையை விட்டு நான் வெளியேற முடியாதபடி அடைத்து வைத்தார்.

அப்போது, குண்டு கார்த்திக்கின் நண்பர்கள் கார்த்திக், நாகராஜ் ஆகிய 2 பேரும் அறைக்கு வந்தனர். அவர்களும் என்னை மிரட்டி கற்பழித்தனர். இப்படி 3 நாட்கள் அறையில் என்னை 3 பேரும் பலவந்தப்படுத்தி கற்பழித்தனர். பின்னர் என்னை விட்டு விட்டுப் போய் விட்டனர் என்று கூறியிருந்தார் ஆஜிரா.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸார், குண்டு கார்த்திக்கை கைது செய்தனர். அதேபோல அவரது நண்பர் கார்த்திக்கும் கைது செய்யப்பட்டார். நாகராஜ் தலைமறைவாகி விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+