பத்ம விபூஷன்: சச்சின் மகிழ்ச்சி
அடிலைட்: பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளதற்கு சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 2வது மிகப் பெரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருது சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள சச்சின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் பல விருதுகளையும், பட்டங்களையும், பரிசுகளையும் வென்றுள்ளேன். ஆனால் அவை எல்லாவற்றையும் விட மிகவும் உயர்வானது இந்த விருது.
நாட்டின் மிகப் பெரிய 2வது சிவிலியன் விருதினை எனக்குத் தந்துள்ளதற்காக மத்திய அரசுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். என்னைக் கெளரவித்ததற்காக நன்றி கூறிக் கொள்கிறேன்.
நான் இந்தியாவுக்காக பல ஆண்டுகள் விளையாடி வருகிறேன். இந்த நிலையில் மத்திய அரசு எனக்கு தந்துள்ள இந்த கெளரவம் மிகவும் சிறப்பானது, விசேஷமானது.
எனது மனைவிதான் விருது கிடைத்த செய்தியை எனக்குத் தெரிவித்தார். கேட்டவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது ஆட்டத்தின் நடுவில் இருந்ததால், மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தினேன்.
என்னைப் போல விருது பெற்ற மற்றவர்களையும் நான் வாழ்த்துகிறேன். பெரும் பெரும் ஜாம்பவான்களுடன் எனது பெயரும் இடம் பெற்றிருப்பது எனக்கு பெரிய கெளவரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
ஒரு நீண்ட நாள் கனவு நனவானது போல தோன்றுகிறது என்றார் சச்சின்.
சச்சின் தவிர ஆஷா போன்ஸ்லே, ரத்தன் டாடா, விஸ்வநாதன் ஆனந்த், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்த, சமீபத்தில் மரணமடைந்த எட்மண்ட் ஹில்லாரி உள்ளிட்டோருக்கும் பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications