புலிகள் ஏவுகணை தாக்குதல்-மயிரிழையில் தப்பினார் கோதபயா ராஜபக்சே!

இதில் நூலிழையில் அவர்கள் உயிர் தப்பினர். புலிகளின் அதிரடித் தாக்குதலில் பலாலி ராணுவ தளம் பலத்த சேதமடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பும் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று பலாலி பகுதியில் பெரும் தாக்குதலில் விடுதலைப்புலிகள் இறங்கினர். நேற்று மாலை, கோத்தபயா ராஜபக்சே, ராணுவ தளபதி பொன்சேகரா உள்ளிட்டோர் பலாலி ராணுவதளத்திற்கு விமானம் மூலம் வந்தனர்.
அவர்கள் விமான தளத்ைத நெருங்கியபோது திடீரென விடுதலைப் புலிகள் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலில் இறங்கினர். இதனால் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. மேலும், ஏவுகணைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க விமானி கடுமையாக முயன்று மேல் நோக்கி விமானத்தை செலுத்தி கோத்தபயா உள்ளிட்டோரைக் காத்தார்.
அதன் பின்னர் விமானம் மீண்டும் கொழும்புக்கே திரும்பிச் சென்றது. இதையடுத்து பலாலி தளம் மீது விடுதலைப் புலிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் விமான தளம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஓரிரு விமானங்களும் கூட இதில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து பலாலி ராணுவ தள விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. மேலும் வேறு சில விமான தளங்களிலும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புதிய தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் பெரும் பதட்டமும், பரபரப்பும் அதிகரித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications