மேற்கு வங்கம்-13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல்: 27 லட்சம் கோழிகள் அழிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை அடுத்து அம் மாநிலத்தில் இதுவரை 27 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
மேற்குவங்கத்தில் பறவைக் காய்ச்சல் மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. அம்மாநிலத்தின், நடியா மாவட்டங்களில் ஆரம்பித்த H5N1 என்ற வைரஸ் தாக்குதலால் அங்குள்ள கோழிப்பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன.
இதையடுத்து வேகமாக பிற மாவட்டங்களுக்கும் இந்த நோய் பரவியது. இதைத் தொடர்ந்து கோழிகளை அந்த மாநில அரசு கொன்று வருகிறது. கடந்த இரு வாரங்களில் இதுவரை 27 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் மேற்கு வங்க அதிகாரிகளுக்கு உதவ தமிழகத்தில் இருந்தும் ஒரு டீம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கோழிகள் கொல்லப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் பறவைக் காய்ச்சல் மனிதர்கள் யாருக்கும் இதுவரை பரவவில்லை என அம் மாநில அரசு கூறுகிறது. பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பீதியடைந்த 3,500 பேரின் ரத்தங்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் அவர்களுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்பது தெரியவந்துள்ளதாம்.
மேற்கு வங்கத்தில் உள்ள 19 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தற்போது 13 மாவட்டங்களில் பரவிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications