முதுமலையில் அமையப் போகும் புலிகள் சரணாலயம்

டெல்லி: 11வது திட்ட காலத்தில் புலிகள் பாதுகாப்புக்கென (Project Tiger Project) ரூ. 600 கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதுமலையில் புதிதாக ஒரு புலிகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் இதுகுறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
புலிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அவர்களுக்குரிய மாற்று வாழ்விடங்கள் வழங்கப்படும். வன உயிரினப் பாதுகாப்புக்கென தனி கவனம் செலுத்தப்படும்.
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதுமலையிலும், கேரளத்தில் பரிம்பிகுளம்-அண்ணாமலை காட்டுப் பகுதியிலும் (இது தமிழகத்தை ஒட்டு மேற்குத் தொடர்ச்சி மலை காட்டுப் பகுதி) மற்றும் கர்நாடகம், சட்டீஸ்கர், அஸ்ஸாம் மாநிலங்கள் உள்பட 8 இடங்களில் புதிய புலிகள் சரணாலயங்கள் அமைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மேலும் பலமுள்ள அமைப்பாக மாற்றப்படும். புதிதாக கண்காணிப்பு ஆய்வகமும் அமைக்கப்படும் என்றார் சிதம்பரம்.
முதுமலையில் இப்போது யானைகள் சரணாயலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications