வரதட்சணை கேட்டு மனைவி எரித்த கணவன்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரதட்சணைக் கொண்டு வராத இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமியார், மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி, அமுதா நகரை சேர்ந்த சவேரியான் மகன் சூசைமாரியான். தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி, அந்தோணியர்புரத்தை சேர்ந்த சரஸ்வதிக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து சேவியர் பிரசாத், ஜேம்ஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சூசைமாரியான் மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கணவரின் கொடுமை தாங்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்று சரஸ்வதி பணம் வாங்கி வந்துள்ளார்.
இந்த கொடுமை தொடர்ந்துள்ளது. இதற்கு சூசைமரியானின் தாயும், தந்தையும் உடந்தையாக இருந்துள்ளனர்.
கடந்த 18ம் தேதி காலை கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சரஸ்வதி நான் தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாக கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், நானே உன்னை கொல்கிறேன் என்று கூறி மனைவியின் மீது மண்ணென்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டார்.
உடலில் தீப்பிடித்து அலறித் துடித்த சரஸ்வதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சரஸ்வதி, தூத்துக்குடி மாஜிஸ்திரேட் சசிரேகாவிடம் மரண வாக்குமுலம் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரனை நடத்தி கணவர், மாமியார், மாமனார் ஆகியோரை கைது செய்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி 12 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை இறந்தார்.
2வது மனைவியை கொன்ற கணவர்:
இதற்கிடையே நெல்லை அருகே பணம் தர மறுத்த தனது மனைவியை கணவர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள தெற்குப்பட்டியை சேர்ந்தவர் சுப்புக்குட்டி. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் கடையநல்லூரை சேர்ந்த மாரியம்மாள் என்பவரை கடந்த 14 வருடங்களுக்கு முன்பு சுப்புக்குட்டி 2வது திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மாரியம்மாள் பீடி சுற்றும் கூலி வேலை செய்து வந்தார்.
சுப்புக்குட்டி தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து பணத்தை பிடுங்கி துன்புறுத்தி வந்துள்ளார்.
மாரியம்மாள் பீடி சுற்றி சிறுக சிறுக சேமித்து வங்கியில் ரூ.50,000 போட்டு வைத்திருந்தார். அந்த பணத்தை கேட்டு சுப்புக்குட்டி அடிக்கடி மாரியம்மாளிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாரியம்மாள் அவரது சித்தி பகவதி வீட்டில் போய் பீடி சுற்றிக் கொண்டிருந்தார். பகவதி வீட்டுக்கு சென்ற சுப்புக்குட்டி தனது மனைவியிடம் நான் வேலைக்கு செல்ல வேண்டும், எனக்கு சாப்பாடு வைக்க வா என்று அழைத்துள்ளார்.
சாப்பாடு வைப்பதற்காக வீட்டிற்கு வந்த மாரியம்மாளிடம், வங்கியில் போட்டு வைத்துள்ள பணத்தை கேட்டு மீண்டும் தகராறு செய்து அடித்து உதைத்துள்ளார் சுப்புக்குட்டி.
அப்போது மாரியம்மாள் கணவரை தள்ளிவிட்டு தப்பியோட முயன்றபோது ஆத்திரமடைந்த சுப்புக்குட்டி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மாரியம்மாளின் தலையில் வெட்டினார். பின்னர் அவரது தலையை பிடித்து சுவரில் மோதியதில் மண்டை உடைந்த மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
மனைவி இறந்ததை பார்த்த சுப்புக்குட்டி அங்கிருந்து தப்பியோடி விட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொன்ற கணவரை தேடி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications