சில்லறை இல்லையா.. பஸ்சை விட்டு இறங்குங்க! திடீர் ஆய்வுக்கு சென்ற அமைச்சரை இறக்கிவிட்ட கண்டக்டர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஓடும் அரசுப்பேருந்துகள் ஸ்டாப்களில் சரியாக நிறுத்தப்படுவது இல்லை. பயணிகளிடம் நடத்துநர்கள் கனிவாக நடந்து கொள்வது இல்லை என்ற புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வரும் நிலையில் பயணிகள் படும் சிரமத்தை நேரில் அறிந்து கொள்வதற்காக அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், பேருந்தில் திடீர் ஆய்வுக்கு சென்றார்.

யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து கொண்டு சாதாரண பயணி போல பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பெங்களூர் நகர பேருந்து ஒன்றில் டிக்கெட் எடுக்க தேவையான சில்லரை இல்லததால், அவரை கண்டக்டர் பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

Karnataka Minister Asked to Get Off Bus During Undercover Surprise Check

நிற்காமல் சென்ற பஸ்

பயணிகளின் சிரமங்களை நேரடியாக கண்டறிவதற்காக ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பைரதி சுரேஷ், பெங்களூர் நகருக்குள் கிட்டத்தட்ட 10 பஸ்களில் பயணித்துள்ளார். இதில் டிரைவர்கள், கண்டக்டர்கள் பல இடங்களில் அலட்சியமாக பயணிகளிடம் நடந்து கொண்டதை சுரேஷ் நேரடியாகவே பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குறிப்பாக ஃபன் வேர்ல்டு ஸ்டாப் அருகே பேருந்தை நிறுத்துமாறு பயணி கூறியும் நிற்காமல் டிரைவர் பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார்.

இதைக் கவனித்த அமைச்சர் உடனடியாக இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்துதான் மேற்கூறிய ஹைலட் சம்பவம் நடைபெற்றுள்ளது. பேருந்தில் பயணிக்கும் போது பயணிகள் ரூ.100, 500 தாள் வைத்து இருந்தால் கண்டக்டர் என்ன சொல்ல போகிறாரோ.. என்று அச்சத்துடனேயே பயணிக்கும் நிலையே இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது. கர்நாடகாவும் இதற்கு விதி விலக்கு இல்லை.

பஸ்சில் இருந்து இறக்கிவிட்டனர்

சாதாரண பயணிக்கு தான் இந்த நிலைமை என்றால், இந்த கசப்பான அனுபவம் அமைச்சருக்கும் நடந்துள்ளது. ஹெப்பல் - நகஷெட்டியல்லி ரூட் பஸ்சில் பயணித்த அமைச்சர் சுரேஷ், கண்டக்டரிடம் 100 ரூபாய் தாளை நீட்டியுள்ளார். இதை பார்த்ததும் கடுப்பான கண்டக்டர், சில்லறை கொண்டு வர மாட்டீங்களா.. இல்லை என்றால் பஸ்சை விட்டு இறங்கிவிடுங்கள்.. என்று கூறி இறக்கிவிட்டுள்ளார்.

பேருந்தில் இருந்து இறங்கிய பிறகு, அங்குள்ள ஆட்டோ ரிக்‌ஷாவில் விலை கேட்டு இருக்கிறார். மீட்டரில் 30 ரூபாய் காட்டிய போதும் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் 36 ரூபாய் கேட்டுள்ளார். பெங்களூரில் பயணிகள் அனுபவிக்கும் அன்றாட பிரச்சினைகளை நேரடியாக அனுபவித்த அமைச்சர் சுரேஷ், இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆய்வு நடவடிக்கைக்கு பிறகு பேசிய அமைச்சர், "பேருந்துகளில் பயணிகள் எதிர்கொள்ளும் சவால்களை கண்டறிய இந்த ரியாலிட்டி செக் அப் நடைபெற்றது.

அமைச்ச நடத்திய இந்த திடீர் ஆய்வு

இந்த திடீர் ஆய்வுகள் பெங்களூர் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும். போக்குவரத்து ஊழியர்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், ஒழுக்கத்தை உறுதி செய்யவும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என்றார். உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக பெங்களூர் உள்ளது.

பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படும் நிலையில், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதில் இருக்கும் இதுபோன்ற சிரமங்களை கண்டறிந்து பயணிகள் சவுகரியமாக பயணிக்கும் வகையிலான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், பெங்களூர் நகர வாசிகள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அமைச்சரின் இந்த ஆய்வு குறித்த தகவல் பெங்களூர் நகர பேருந்து ஊழியர்களிடையே காட்டுத்தீ போல பரவிய நிலையில், பலரும் இதுபற்றி பரபரப்பாக பேசிக்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+