பாத்ரூம் யூஸ் பண்ணிக்கலாமா.. பார்சல் டெலிவரிக்கு போன ஃப்ளிப்கார்ட் ஏஜென்ட் செய்த செயல்.. அலறிய பெண்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் வசித்து வரும் பெண்ணிடம் பார்சல் டெலிவரி செய்ய ஃபிளிப்கார்ட் ஏஜென்ட் சென்றார். அப்போது வீட்டில் தனியாக பெண் இருப்பதை அறிந்த அந்த ஏஜென்ட் 'பாத்ரூம் பயன்படுத்தி கொள்ளலாமா' என்று கூறி அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து அந்தரங்க உறுப்பை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி பெண் வீடியோ வெளியிட்ட நிலையில் அந்த ஏஜென்ட்டை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்ட்டாக பணியாற்றி வந்தவர் விஜய் மல்லிகார்ஜுன் காமத். இவர் பெங்களூரில் உள்ள பிளாட்டுக்கு சென்று பார்சல் ஒன்று டெலிவரி செய்தார். வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார். அவரிடம் பார்சலை கொடுத்த விஜய், ''பாத்ரூம் யூஸ் பண்ணிக்கலாமா'' என்று கேட்டுள்ளார்.

in-bengaluru-flipkart-delivery-agent-flasher-her-after-barged-entry-into-woman-house-in-the-name-of

அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது வீட்டிற்குள் வெளியே இருந்து வரும் நபர்களை அனுமதிப்பது இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அதனை விஜய் காதில் வாங்கவில்லை. திறந்து கிடந்த வீட்டிற்குள் நுழைந்து பெட்ரூம் சென்று பாத்ரூம் பயன்படுத்திவிட்டு வெளியே வந்தார்.

அப்போது அவர் தனது வக்கிர குணத்தை வெளிப்படுத்தி உள்ளார். தனது அந்தரங்க உறுப்பை அந்த பெண்ணிடம் காண்பித்தபடி வெளியேறியுள்ளார். இதனை அந்த இளம்பெண் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். மேலும் டெலிவரி ஏஜென்ட்டின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அழுதபடி, ''என்னை பற்றி என்ன நினைத்தாய்.. நான் போலீசில் புகார் அளிக்க போகிறேன்'' என்று கூறுகிறார்.

அதற்கு விஜய், ''ஒன்றும் இல்லை என்று வேகமாக அங்கிருந்து செல்கிறார்''. அதற்கு அந்த பெண், பின்தொடர்ந்து செல்கிறார். டெலிவரி ஏஜென்ட், லிப்ட்டில் செல்ல முயற்சிக்கிறார். ஆனால் இளம்பெண் செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்து அவர் லிப்ட்டை விட்டு வெளியேறி படிக்கட்டு வழியாக வேகமாக செல்கிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த இளம்பெண் வீடியோவை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு பெங்களூர் போலீசில் புகார் செய்தார்.

அதில், ''டெலிவரி ஏஜென்ட் பாத்ரூம் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். நான் மறுப்பு தெரிவித்தேன். பக்கத்தில் வசிக்கும் ஆண்களிடம் கேட்கும்படி கூறினேன். ஆனால் அவர் என் பிளாட்டிற்குள் வேகமாக நுழைந்து என்னுடைய அனுமதியின்றி பாத்ரூம்மை பயன்படுத்தினார். பாத்ரூமில் இருந்து வெளியே வந்தபோது அந்தரங்க உறுப்பை காட்டினார். நான் அதிர்ச்சியடைந்தேன். சொந்த வீட்டிலேயே பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தேன். ஒரு பெண் வேண்டாம் என்று கூறினால் அதோடு அனைத்தும் முடிந்திருக்க வேண்டும். அத்துமீறி வீட்டிற்குள் நுழைய யாருக்கும் அனுமதியில்லை'' என்று கூறியிருந்தார்.

இளம்பெண்ணின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ புகாரை தொடர்ந்து விஜய் மல்லிகார்ஜுன் காமத் மீது பெங்களூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஃபிளிப்கார்ட் நிறுவனமும் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம், ''இந்த சம்பவத்துக்கு எங்களையும் பாதித்துள்ளது. இந்த விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இந்த சம்பவம் பற்றிய விவரம் எங்களின் கவனத்துக்கு வந்தவுடன் அந்த நபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம்.

அனைத்து டெலிவரி பார்ட்னர்களின் பின்னணியும் விசாரிக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்ட பிறகு தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதனால் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகவே நடக்கிறது. ஆனாலும் இதுபோன்ற ஒரு சம்பவத்தையும் சகித்து கொள்ள முடியாது. இந்த விவகாரத்தை தொடர்ந்து கஸ்டமர்களின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தும் வகையில் பிற நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்து வருகிறோம்'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+