சென்னை பிளாட்பாரத்தில் வீசப்பட்ட சிசு மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூரில், பிறந்து சில நாட்களே ஆன அழகிய பெண் குழந்தை பிளாட்பாரத்தில் வீசப்பட்டிருந்தது. அதை போலீஸார் மீட்டனர்.
எழும்பூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் கல்யாண மண்டபம் உள்ளது. இதையொட்டி உள்ள பிளாட்பாரத்தில் மாநகராட்சி கழிப்பிடம் உள்ளது.
நேற்று அதிகாலை கழிப்பறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அப்பகுதி வழியாக போனவர்கள் கழிப்பறைக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது அவர்களது நெஞ்சை பதற வைக்கும் வகையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணியால் போர்த்தப்பட்டு கிடந்தது.
உடனடியாக எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications