வெடிகுண்டுகளுடன் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
செங்கோட்டை: செங்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்ட வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வட்ட கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர்ஜெயசுப்பிரமணியன் தலைமையில் புளியரை சப்-இன்ஸ்பெக்டர் முகமது அனீபா, ஏட்டுகள் மவூது கனி, மணி ஆகியோர் செங்கோட்டை அருகே உள்ள இரவியதர்மபுரம், பூலாங்குடியிருப்பு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது பூலாங்குடியிருப்பு விலக்கில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் சென்றனர். ஆனால், போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 7 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன.
அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியபோது அவர் செங்கோட்டை அருகேயுள்ள கதிரவன் காலனியை சேர்ந்த பண்டாரம் என்ற மூக்காண்டியின் மகன் செல்லச்சாமி என்பது தெரியவந்தது.
செல்லச்சாமி மீது வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், தென்காசி சூப்பிரண்டு மயில்வாகணன் ஆகியோர் செல்லசாமியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.
இதை ஏற்ற கலெக்டர் பிரகாஷ், செல்லச்சாமியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடத்து அவர் பாளைங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ெசல்லச்சாமியிடம் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை குற்றப்பிரிவு எம்.கீரிடராஜன் செயல் இழக்கச் செய்தார். இவர் ஒரு பாம் எக்ஸ்பர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications